ඔබ මෙතනයි : මුල් පිටුව

இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 விண்ணப்பம்

இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 க்கான பின்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

 

இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகம்

(1985 ம் ஆண்டு 31 ஆம் இலக்க இந்துப் பண்பாட்டு நிதியச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது)

விண்ணப்பம் கோரல்

இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019

இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பின்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

  1. 1. ஆன்மிகப் பிரசாரகர்களுக்கான சான்றிதழ் / பட்டய (டிப்ளேமா) பயிற்சி நெறி

ஆன்மீகப் பிரசாரகர்களின் வாண்மையையும் சேவை மனப்பாங்கையும் விருத்தி செய்யும் நோக்குடன் சான்றிதழ் பயிற்சிநெறி 90 மணித்தியாலங்கள் கொண்டதாகவும் பட்டய (டிப்ளோமா) பயிற்சிநெறி 180 மணித்தியாலங்கள் கொண்டதாக நடைபெறும்.

  1. 2. இந்து சமய அறிநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தலை மேம்படுத்துதல் தொடர்பான சான்றிதழ் / பட்டய (டிப்ளேமா) பயிற்சி நெறி

இந்துசமய அறநெறி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்குடன் சான்றிதழ் பயிற்சிநெறி 90 மணித்தியாலங்கள் கொண்டதாகவும் பட்டய (டிப்ளோமா) பயிற்சிநெறி 180 மணித்தியாலங்கள் கொண்டதாக நடைபெறும்..

 

  1. 3. அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தலை மேம்படுத்துதல் தொடர்பான அடிப்படைப் பயிற்சி நெறி

இந்துசமய அறநெறி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துதல் தொடர்பான அடிப்படைப் பயிற்சிநெறி ஒருநாள் / இரண்டுநாள் செயலமர்வாக நடைபெறும்..

  1. 4. இந்து சமய அறிநெறி ஆசிரியர்களுக்கான சமய அறிவை மேம்படுத்துதல் தொடர்பான அடிப்படை / உயர் பயிற்சி நெறி

இந்துசமய அறநெறி ஆசிரியர்களிற்கான சமய அறிவை மேம்டுத்துதல் தொடர்பான அடிப்படைப் பயிற்சிநெறி (இந்துசமய இறுதிநிலை பயிற்சிக்கு தோற்றவுள்ளவர்களிற்கு) மற்றும் உயர் பயிற்சிநெறி (தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களிற்கு) என்பன ஒருநாள் / இரண்டுநாள் செயலமர்வாக நடைபெறும்..

  1. 5. இந்து சமய அறநெறிப் பாடசாலை மானவர்களுக்கான  ஆன்மீகம் சார்ந்த தலைமைத்துவப் பயிற்சி நெறி

இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களிற்கான ஆன்மீகம் சார்ந்த தலைமைத்துவப் பயிற்சிநெறி மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை ஆன்மிகத்துடன் இணைந்ததாக வளர்த்துக்கொள்ளும் நோக்குடன் மூன்றுநாள் பயிற்சிப் பட்டறையாக நடைபெறும்..

  1. 6. இந்து சமய அறநெறிப் பாடசாலை மானவர்களுக்கான  யோகா சனம்,  தியானம் தொடர்பான பயிற்சி

இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசனம். தியானம் தொடர்பான பயிற்சிநெறி 40 மணித்தியாலங்கள் கொண்டதாக நடைபெறும்..

  1. 7. இந்து சமய அறநெறிப் பாடசாலை மானவர்களுக்கான பண்ணிசைப் பயிற்சி

இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவருக்கான பண்ணிசைப் பயிற்சிநெறி 40 மணித்தியாலங்கள் கொண்டதாக நடைபெறும்.

  1. 8. இந்து இளைஞர்களுக்கான ஆன்மீகம் சார்ந்த அடிப்படை / உயர் தலைமைத்துவப் பயிற்சி நெறி

இந்து இளைஞர்களுக்கான ஆன்மீகம் சார்ந்த அடிப்படை / உயர் தலைமைத்துவப் பயிற்சிநெறி இளைஞர்களின் தலைமைத்துவத் திறன்களை ஆன்மீகத்துடன் இணைந்ததாக வளரத்துக்கொள்ளும் நோக்குடன் மூன்றுநாள் பயிற்சிப் பட்டறையாக நடைபெறும்..

  1. 9. இந்து மத குருமார். இந்து ஆலய மற்றும் இந்து நிறுவனங்களின் நிருவாகிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி நெறி

இந்துமத குருமார் இந்து ஆலய மற்றும் இந்து நிறுவனங்களின்  நிருவாகிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சியானது இந்து ஆலயங்கள் மற்றும் இந்துசமய நிறுவனங்களைச் சிறந்த முறையில் செயற்படுத்துவதற்கான தலைமைத்திறன்களை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் ஒருநாள் / இரண்டுநாள் பயிற்சிப் பட்டறையாக நடைபெறும்..

  1. 10. சாசனவியல் தொடர்பான அடிப்படை/உயர் பயிற்சி நெறி

சாசனவியல் தொடர்பான அடிப்படை / உயர் பயிற்சிநெறி சாசனவியல் தொடர்பான மேன்மையான அறிவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் துறைசார்ந்த ஆர்வலர்களிற்கு பெற்றுக்கொடுப்பதனை நோக்காகக் கொண்டு 80 மணித்தியாலங்கள் கொண்ட சான்றிதழ்ப் பயிற்சிநெறியாக நடைபெறும்..

  1. 11. யோகாசனம் -அடிப்படை/உயர் பயிற்சி நெறி

யோகாசனம் அடிப்படை / உயர் பயிற்சிநெறி யோகாசனம் பயில ஆர்வமுள்ளவர்களிற்காக 40 மணித்தியாலங்கள் கொண்ட சான்றிதழ்ப் பயிற்சிநெறியாக நடைபெறும்..

  1. 12. சமஸ்கிருதம் -அடிப்படை/உயர் பயிற்சி நெறி

சமஸ்கிருதம் அடிப்படை / உயர் பயிற்சிநெறி சமஸ்கிருதம் பயில ஆர்வமுள்ளவர்களிற்காக 80 மணித்தியாலங்கள் கொண்ட சான்றிதழ்ப் பயிற்சிநெறியாக நடைபெறும்.

  1. 13. இசைக் கருவிகள் பாரம்பரிய கலைகள் தொடர்பான அடிப்படைப் பயிற்சி நெறி

இசைக் கருவிகள் பாரம்பரியக் கருவிகள் தொடர்பான அடிப்படைப் பயிற்சிநெறி இசைக்கருவிகள் பாரம்பரியக் கருவிகளை பயில ஆர்வமுள்ளவர்களிற்காக 80 மணித்தியாலங்கள் கொண்ட சான்றிதழ்ப் பயிற்சிநெறியாக நடைபெறும்.

  1. 14. சைவ நெறி பாடம் கற்பித்தல் தொடர்பான ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சி நெறி

சைவநெறி பாடம் கற்பித்தல் தொடர்பான ஆசிரியர்களிற்கான அடிப்படைப் பயிற்சிநெறி பாடசாலைகளில் சைவநெறிப்பாடம் கற்பிப்பவர்களது வாண்மை விருத்தியை நோக்காகக் கொண்ட ஒருநாள் / இரண்டுநாள் செயலமர்வாக நடைபெறும்.

இக்கற்கை நெறிகளிற்கு விண்ணப்பிக்கும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் IHRCA - 02 என்ற விண்ணப்பப் படிவத்திலும் அறநெறிப்  பாடசாலைகள்/ நிறுவனங்கள், மாணவர்கள்/ உறுப்பினர்கள் சார்பாக IHRCA - 03 என்ற விண்ணப்பப் படிவத்திலும் விண்ணப்பித்தல் வேண்டும். இப்பாடநெறிகளை தொடர விரும்புவோர் மேலதிக விபரங்களையும்  விண்ணப்பப் படிவங்களையும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் ( www.hindudept.gov.lk )  அல்லது நேரடியாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட / பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பங்கள ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 25 ஏப்ரல் 2018 ஆகும்.

பணிப்பாளா்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
இந்துமத அலுவல்கள் அமைச்சு

Application FORM IHRCA 2 Click here

Application FORM IHRCA 3 Click here
අවසන් යාවත්කාලීන කිරීම ( 2018 අප්‍රේල් 03 වෙනි අඟහරුවාදා, 11:21 )