நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு

இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருதுகள் - 2018

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நாடளாவிய ரீதியில் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களது ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான ஆளுமைப் பண்புகளை விருத்தி செய்யும் நோக்கோடு பின்வரும் ஆக்கதிறன் நிகழ்வுகள் நான்காவது வருடமாக நடாத்தப்படவுள்ளது.

 

தனி நிகழ்வுகள்
01. பேச்சாற்றல்
02. எழுத்தாற்றல்
03. சித்திரம்
04. கதாப்பிரசங்கம்

 

குழு நிகழ்வுகள்

01. பண்ணிசை
02. நாடகம்
03. வில்லுப்பாட்டு
04. பரத நாட்டியம்

 

இந்நிகழ்வுகள் அறநெறிப் பாடசாலை, பிரதேச,மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் நடாத்தப்பட்டு சிறப்பான ஆக்கதிறன்களை வெளிக்காட்டும் மாணவர்கள் “தேசிய ஆக்கத்திறன் விருதுகள்”,பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பெறுமதியான பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவர்.

 

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அறநெறிப் பாடசாலைகளிற்கும் அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக விபரங்களை www.hindudept.gov.lk எனும் திணைக்கள இணையத்தளத்திலும் நேரடியாக திணைக்களத்திலும் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமும் பெற்றுக்ககொள்ளலாம். விண்ணப்பப்படிவங்களை அறநெறிப் பாடசாலைகள் 31.05.2018ஆம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்.

 

பணிப்பாளர்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
248 -1/1 காலி வீதி
கொழும்பு – 04.

 

தொலை பேசி
(011) 255 2641
(011) 255 4278

 

Aranery Creativity Circular 2018

Application form for Aranery Creativity 2018

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 04 ஏப்ரல் 2018 10:36 )  
மே 2019
ஞா தி செ பு வி வெ
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1

செய்திகளும் சம்பவங்களும்