நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு செய்திகளும் சம்பவங்களும் சுவரொட்டிச் சித்திரப்போட்டி – 2019

சுவரொட்டிச் சித்திரப்போட்டி – 2019

Artஎதிர்வரும் ஜூலை, 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கிடையே இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திடுவீர்” என்னும் கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் சுவரொட்டிச் சித்திரப்போட்டி

போட்டி விதிகள்

  • வயது 10 முதல் 18 வயது வரை (5ம் வகுப்பு முதல் உயர் தரம் வரை) பாடசாலைகளிற் கல்வி கற்கும் இந்து மாணவர்கள் பங்குபற்றலாம்.
  • A4 அளவுடைய வெள்ளை நிற கடதாசி அல்லது பொருத்தமான வெள்ளை நிற மட்டையில் பொருத்தமான வர்ணங்களைக் கொண்டு இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திடுவீர்” என்னும் கருப்பொருளில் வரைதல் வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் தங்களது ஆக்கங்கள்; சுயஆக்கம் என்பதனை பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்துவதுடன் விண்ணப்பதாரியின் பெயர் மற்றும் முகவரி, கல்வி கற்கும் பாடசாலை என்பவற்றைக்  குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும். பெயர் மற்றும் முகவரி ஆங்கிலப் பெரிய எழுத்தில் (Capital Letter) அவசியம் எழுதப்படல் வேண்டும்.
  • ஒரு விண்ணப்பதாரியினால் ஒரு ஆக்கம் மட்டுமே தயாரிக்கப்படல் வேண்டும். இதுவரை வெளிவராத ஆக்கமாகவுங் காணப்படல் வேண்டும்.
  • உங்கள் ஆக்கங்கள் 2019 ஜூலை மாதம் 20ம் திகதிக்கு முன்னர் “பணிப்பாளர், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இல.248 - 1/1, காலி வீதி, கொழும்பு - 04” எனும் முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ  அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்குப் பிராந்திய அலுவலகத்திலோ அல்லது மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பிராந்திய அலுவலகத்திலோ ஒப்படைக்க முடியும். ஆக்கத்தினை வைத்து அனுப்புங் கடித உறையில், இடப்பக்க மேல் மூலையிற்        “ தேசிய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் – 2019, சுவரொட்டிப் போட்டி” எனக் குறிப்பிடப்படல் வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு உட்படாதவர்களது ஆக்கங்கள்  நிராகரிக்கப்படும். சபையின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும்.

 

பரிசில்கள்

முதலாம் பரிசு – ரூபா 15,000/= பணப்பரிசு மற்றுஞ் சான்றிதழ்.

இரண்டாம் பரிசு – ரூபா 12,500/= பணப்பரிசு மற்றுஞ் சான்றிதழ்.

மூன்றாம் பரிசு – ரூபா 10,000/= பணப்பரிசு மற்றுஞ் சான்றிதழ்.

நான்காமிடம்  முதற் பத்தாமிடம் வரையிற் பரிசில்கள் ரூபா 5000/= பெறுமதியான நூற் பொதிகள் மற்றுஞ் சான்றிதழ்.

தரமான ஏனைய படைப்புகளுந் தெரிவு செய்யப்பட்டுப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 0112554278 எனும் இலக்கத்தோடு தொடர்புகொள்ளவும்.