நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு தொடர்புடைய அமைப்புகள்

தொடர்புடைய அமைப்புகள்

இந்து பண்பாட்டு நிதியம்

1985ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்தின் மூலம் 31ஆம் இலக்க சட்ட மூலமாக இந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை சுதந்திரமாக நிறைவேற்றுவதற்காக இந்நிதியம் உருவாக்கப்பட்டது.

இந்து பண்பாட்டு நிதியம் ஆளுனர் சபை ஒன்றின் மூலம் நிருவகிக்கப்படுகின்றது. பதவிவழியாக 3 உறுப்பினர்களும் இவ்விடயத்திற்கு பொறுப்பான கௌரவ அமைச்சரின் மூலம் ஐந்து உறுப்பினர்களும் ஆளுனர் சபையில் நியமனம் பெறுகின்றனர். குறித்த எட்டுப்போரில் ஒருவர் தவிசாளராக அமைச்சரினால் நியமிக்கப்படுவர்.

குறிக்கோள்கள்:

  • இந்துஆலயங்கள், நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்தல்.
  • இந்து ஆலய புனர்நிர்மான வேலைகளுக்கு உதவுதல்.
  • இந்துசமய ஆய்வுகளை மேற்கொள்ளல்.
  • ஆக்கங்களை வெளியிடுதல்.
  • இந்துசமயத்தினதும் பண்பாட்டினதும் மேம்பாட்டிற்குமாக கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றை ஏற்பாடுசெய்து நடத்துதல்.

இந்நிதியத்திற்கு நிதியுதவி செய்விரும்புவோர் கீழ்வரும் வங்கிக் கிளைக்கு உரிய கணக்கிலக்கத்திற்கு நேரடியாக வைப்புச் செய்யலாம்.

வங்கியின் பெயரும் குறியீட்டிலக்கமும் இலங்கை வங்கி - 7010
கிளையின் பெயரும் குறியீட்டிலக்கமும் மிலாகிரிய - 593
வங்கிக்கணக்கின் பெயரும் கணக்கிலக்கமும்
இந்துப்பண்பாட்டு நிதியம் - 0001991680
குறியீடு BCEYLKLX

நிருவாகசபை ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம், பாணந்துறை

கொழும்பிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் பிரதான காலி வீதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 1952 ஆம் ஆண்டு பாணந்துறை மாவட்ட நீதிபதியாக இருந்த ஸ்பென்சர் இராஜரட்ணம் அவர்களின் முயற்சியினால் இந்து வர்த்தகப் பெருமக்களுடைய மற்றும் பிரதேச வாசிகளினுடைய ஆதரவுடன் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நடைபெற்ற இன வன்முறைகள் காரணமாக இவ்வாலயம் சேதமாக்கப்பட்டதோடு இங்கு பணிபூரிந்த ஆலய குருக்கள்மாரும் பாதிப்புக்குள்ளாகினர். இதன்நிமித்தமாக பூஜா கருமங்கள் முற்றாக நிறுத்தப்பட்டன.

இந்த ஆலயத்தை 2008ஆம் ஆண்டு இந்துசமய கலாசாரத் திணைக்களம், இந்துப் பண்பாட்டு நிதியம் என்பன பொறுப்பேற்று இரண்டு பூஜகர்களுடைய உதவியோடு கிராமமான பூஜைகளை நடத்தியதோடு புனரமைப்பு பணிகளையும் மேறகொண்டது 16.07.2010 ஆம் திகதி மஹா கும்பாபிசேகம் நடத்தப்பட்டு தற்போது ஆலயம் சிறப்பாக இயங்குகின்றது.

நிருவாகசபை ஸ்ரீ திருமுருகண்டிப் பிள்ளையார் ஆலயம், திருமுறிகண்டி.

யாழ்ப்பாணம் ஏ 9 வீதியில் கிளிநொச்சி மாங்குளத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இலங்கையின் மிகப் பழமையான ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது. இவ்வீதியால் செல்லும் வாகனங்கள் தரித்து நிற்பதோடு தவறாது அனைவரும் தரிசித்துச் செல்வர்.

அண்மைக்கால யுத்தத்தின் காரணமாக ஆலயமும் சூழ உள்ள பிரதேசங்களும் சேதமுற்றன பின்னர் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டபோது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துப் பண்பாட்டு நிதியம், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் என்பன இணைந்து புதிய நிர்வாக சபையொன்றை உருவாக்கி நிர்வகித்து வருகின்றது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011 06:19 )