போதனாசிரியர்களாக வெளியக வளவாளர்களைப் பதிவு செய்தல் - கல்வி ஆண்டு – 2018/ 2019

இத்திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட பிரதேச மட்டங்களில் நடத்தப்படும் பின்வரும் பயிற்சி நெறிகளிற்கு  வெளியக வளவாளர்களாக போதனாசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகம்

(1985 ம் ஆண்டு 31 ஆம் இலக்க இந்துப் பண்பாட்டு நிதியச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது)

விண்ணப்பம் கோரல்

போதனாசிரியர்களாக வெளியக வளவாளர்களைப் பதிவு செய்தல் -

கல்வி ஆண்டு 2018/ 2019

இத்திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட பிரதேச மட்டங்களில் நடத்தப்படும் பின்வரும் பயிற்சி நெறிகளிற்கு  வெளியக வளவாளர்களாக போதனாசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2. வெளியக வளவாளர் பதவிக்குத் தேவையான விண்ணப்பம் பாட விபரங்கள் என்பவற்றை அவரவர் கடமையாற்ற விரும்பும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட /பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதனை தங்களது முகவரியிட்ட முத்திரை ஒட்டப்பட்ட (9″× 4″) அளவு நீளம் கொண்ட கடித உறையினை திணைக்கள முகவரிக்கு அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் வெளியக வளவாளர் எனக் குறிப்பிடவும்.

3. பாட விபரங்கள் விண்ணப்ப படிவங்கள் என்பவற்றை பெற்றுக் கொள்ளும் இறுதித் திகதி 30.03.2018 ஆகும்.

4. விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்கள் :-

(i)    விண்ணப்பதாரிகள் தமது கல்வித்தகைமை, தொழிற்தகைமை, கற்பித்தல் அனுபவம் போன்ற சகல விபரங்களும் உள்ளடக்கப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

(ii)     கொடுப்பனவு - விண்ணப்பதாரிகளின் கல்வித்தகைமை, தொழிற்தகைமை, அனுபவம் என்பவற்றுடன் பயிற்சி நெறிகளின் தரம் என்பவற்றினைக் கருத்திற் கொண்டு அரச சுற்றறிக்கைக்கு அமைவாக வழங்கப்படும்.

(iii)    விண்ணப்பங்கள் அனுப்பும் முறை - அரசாங்க சேவையிலுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை தத்தமது திணைக்களத் தலைவர்கள் ஊடாக அனுப்புதல் வேண்டும். தெரிவு செய்யப்படும் வெளியக வளவாளரால் தங்களது வழமையான கடமைக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை திணைக்களத் தலைவர் ஊடாக உறுதிப்படுத்தல் வேண்டும்.

(iv)     தொரிவு - விண்ணப்பதாரிகளின் தகைமை கற்பித்தல் அனுபவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்படுவர்.

(v)      மேலதிக கொடுப்பனவுகள் எதுவுமின்றி பாடத்திற்கான உள்ளகப் பரீட்சைகளை இவ் வெளியக வளவாளர்கள் நடாத்துதல் வெண்டும்.

5. ஒரு பாடத்திற்கு மேல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும். விண்ணப்பப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 2018.04.10 ஆம் திகதிக்குமுன்னர் கிடைக்கக் கூடியதாக பதிவுத் தபாலில் “பணிப்பாளா் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,  இல : 248 1/1 காலி வீதி கொழும்பு – 4” என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

 

பணிப்பாளா்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
இந்துமத அலுவல்கள் அமைச்சு

application_lecture Click here
Last Updated ( Wednesday, 04 April 2018 04:35 )