ஆர்யகம வெகெர கெலே

சிலாபம் முகுனுவடவன தெதுரு ஒயா அண்மித்து அமைந்துள்ள ஆர்யகம புண்ணிய பூமி நரியாகம வெகெர கெலே என்றும் அறிமுகப்படுத்தியுள்ளது. அனுராதபுர யுகத்து ஆச்சிரமத் தொகுதியென அறிமுகப்படுத்தியுள்ள புண்ணிய பூமியிலுள்ள சிதைவுகள் அனேகம் தெதுரு ஒயா பாதையின் மாற்றத்தினால் அழிவடைந்துள்ளது. தற்சமயம் ஒயாவின் கரையில் உள்ள புரான தாது கோபுரத்தின் அரைவாசி தண்ணீரினால் அழிவடைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பெருமளவு மட்பாண்டத் துண்டுகள் கிடைத்துள்ளது. அவைகளில் அனேகம் பெரிய மட்பாண்டங்களின் பகுதிகளாகும். சில சமயம் தெதுரு ஒயா முகத்துவாரத்துடன் சம்பந்தப்பட்ட சாலதித்த எனும் துறைமுகத்தின் கலஞ்சியத் தொகுதியாக இருக்கலாமென மதிக்கப்படுகின்றது. இங்குள்ள பிக்குமார்களின் வதிவிடம் புண்ணிய பூமியுடன் சம்பந்தமானது என மதிக்கலாம். இங்கு செய்யப்பட்ட அகழ்தலினால் கிடைத்த ரோம நாணயங்களினால் இது வியாபாரம் சம்பந்தப்பட்ட புரான வியாபார நகரத்துடனான புண்ணிய பூமி என நினைக்கலாம்.

வியாழக்கிழமை, 21 ஜூன் 2012 07:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது