தொல்பொருளியல் திணைக்களத்தின் வரலாறு.

தொல்பொருளியல் திணைக்களம் 1890ல் அதன் பணிகளை ஆரம்பித்தாலும் தொல்பொருளியல் பணிகள் தொடர்பான அடிப்படை வேலைகள் அதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன. அது ஸ்ரீமான் ஹர்கியுலஸ் ரொபின்சன் அவர்களுடைய ஆட்சிக்காலத்திலாகும். இந்தியாவில் தொல்பொருளியல் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் 1868ல் (தற்போது ஸ்ரீலங்காவான) இலங்கை அரசாங்கம் இலங்கையில் புராதன கட்டிடக்கலை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் குழுவொன்றை நியமித்தது. 1871ல் நாட்டில் அரசாங்கத்திடமிருந்து நிதி மற்றும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தையும் பொலனறுவையையும் முதன்மையாகக் கொண்டு கட்டிடங்களின் பெறுமதிமிக்க புகைப்படங்கள் பல பெற்றுக்கொள்ளப்பட்டன.

1873ஆம் ஆண்டில் ஸ்ரீமான் வில்லியம் கிறகரி தேசாதிபதி முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ளும்படி பணிப்புரை வழங்கினார். அவ்வாண்டிலேயே புராதன அனுராதபுரம் தொடர்பான அமைவிட ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டது. ஜே.ஜி. ஸ்மினர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி பணிகளை சார்பாகக் கொண்டு தாதுகோபுரங்கள் மற்றும் ஏனைய அழிவுற்ற கட்டிடங்கள் உள்ளடங்கிய "அனுராதபுரத்தின் தொல்பொருளியல் அழிவுச் சின்னங்கள்" என்ற நூல் 1894ல் வெளியிடப்பட்டது.

1875 - 1879 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரச அதிகாரத்துடன் புராதன கற்சாசனங்களையும் மூல ஆவணங்களையும் பகுதிகளாக ஆராய்ந்து சேகரிக்கும் பணியை சிங்கள கற்சாசனவியலின் ஆரம்ப கர்த்தாவான பேராசிரியர் பி.கோல்ட்ஸ்மன் மேற்கொண்டார். அதன் பின்னர் ஈ முலர் மற்றும் மகாமுதலி எல்.டப். த சொய்சா ஆகியோர் இப்பணியைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினர்.

1884 - 1886 காலப்பகுதியில் அனுராதபுரத்திலும் பொலனறுவையிலும் நினைவுச் சின்னங்கள் மற்றும் ஏனைய தொல்பொருட்கள் சம்பந்தமாக அவதானிக்கும் பொறுப்பு (இலங்கை சிவில் சேவையில்) பரொஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அடர்ந்த காடுகள் அழித்து சுத்தமாக்கப்பட்டன. புராதன பாதைகள் முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டடன. புதிய பாதைகள் அமைக்கப்பட்டன. மேலும் மேலும் அகழ்வு வேலைகளை மேற்கொள்வதற்குத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. தொல்பொருளியல் நிலப்பகுதிகள் பற்றியும் பொருட்கள் பற்றியும் வழங்கப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து மேலும் மேலும் அகழ்வு வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஊக்கம் ஏற்பட்டது. அக்காலத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் "அரும்பொருட்களும்" காலத்தின் கோலத்திலிருந்தும் பகையாளிகளின் கொடூரமான ஆயுதங்களிலிருந்தும் தப்பியிருந்த சிற்பங்கள், கலைப்பொருட்கள், ஓவியங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பிரதேச அரும்பொருட் கூடமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் வந்த காலங்களில் அடிப்படை ஆய்வுப் பணிகள் பல மேற்கொள்ளப்பட்டன. 1890 யூலை மாதம் 07ஆம் திகதி அப்போதைய தேசாதிபதியாகவிருந்த ஸ்ரீமான் ஆதர் கோர்டன் வடமத்திய மாகாணத்தில் தொல்பொருளியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி (இலங்கை சிவில் சேவையில்) எச்.சி.பி. பெல் அவர்களுக்குக் கட்டளையிட்டார். இலங்கையின் அறிவியல் ரீதியான தொல்பொருளியலின் உத்தியோகபூர்வ பிறந்தநாள் இதுவாகும்.

தொல்பொருளியல் துறையை பகுதி பகுதியாகப் பிரித்து எச்.சி.பி. பெல் தனது பணிகளை ஆரம்பித்தார். அவ்வாறிருப்பினும் அவருடைய முக்கிய பணி ஆய்வுடன் தொடர்புபட்டிருந்தது. தனித்துவமான பெறுமதியுடைய தொன்மையான பொருட்கள் வெளிக்காட்டும் பணி தொல்பொருள் அகழ்வுகள் மூலம் ஆரம்பமாகின. கற்சாசனங்களிலும் அவற்றைக் கற்றறியும் பணிகளிலும் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தப்பட்டது. சீகிரியாவிலும் பொலனறுவையிலும் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுகளின் தனித்துவம் பெறுபேறுகள் கிட்டின. 1897ல் சீகிரியாவிலும் பொலனறுவையிலும் சுவரோவியங்களைக் கண்டுபிடித்தமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டது. தொல்பொருளியல் பணிகளோடு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்த 1898ல் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இலங்கையின் தொல்பொருளியல் பணிகள் இரண்டு காலப்பகுதிகளைக் கொண்டு வெளியிடப்படுகின்றன. அதன் முதற் காலப்பகுதி காலனித்துவ யுகமாகும். மற்றைய காலப்பகுதி சுதந்திரமடைந்த காலப்பகுதியாகும். காலனித்துவ காலம் பிரித்தானிய உத்தியோகத்தர்களால் ஆளப்பட்டதோடு சுதந்திர யுகத்தை முகாமைப்படுத்தியதும் ஆண்டதும் இலங்கையர்களே. திணைக்களத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்ட இலங்கையர் கலாநிதி எஸ். பரணவிதான அவர்களாவார்.

தொல்பொருளியல் திணைக்களத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட ஆரம்பகாலத் தலைவர்களின் பெயர்ப்பட்டியல் வருமாறு:

ஆண்டு உத்தியோகத்தரின் பெயர்
1884-1886 திரு.எஸ்.எம். பரோன்
1890-1892 திரு.எச்.சி.பி. பெல்
1892 திரு.லீவர்ஸ் (பதிற்கடமை)
1893-1912 திரு.எச்.சி.பி. பெல்
1912-1913 திரு.ஆர். அயிர்ட்டன்
1913-1914 திரு.பீ. கொன்ஸ்டன்டைன் (பதிற்கடமை)
1914-1918 திரு.எச்.ஆர். பிரீமன் (பதிற்கடமை)
1918-1920 திரு.எப்.ஜி. டிரல் (பதிற்கடமை)
1920-1921 திரு.ஏ.டப். சீமர் (பதிற்கடமை)
1921-1922 திரு.ஜி.எப்.ஆர். பிறவுனிங் (பதிற்கடமை)
1922-1923 திரு.ஏ.எம். ஹொகார்ச்
1923-1924 திரு.ஏ.எம். ஹொகார்ச்
திரு.எப்.பார்ட்லட் (பதிற்கடமை)
1924-1925 திரு.எம்.வெடர்பர்ன் (பதிற்கடமை) திரு.ஈ.ஆர்.சுட்பர் (பதிற்கடமை)
1925-1927 திரு.ஏ.எம். ஹொகார்ட்
1927-1928 திரு.ஈ.டி. டைசன் (பதிற்கடமை)
1928-1929 திரு.சி.எப். வின்சர் (பதிற்கடமை)
1929-1930
திரு.ஜே.பியர்சன் (பதிற்கடமை)
1930-1931
திரு.சி.எப். வின்சர் (பதிற்கடமை)
1931-1934
திரு.எஸ். பரணவிதான (பதிற்கடமை)
1934-1939 திரு.ஏ.எச். லோங்ஹர்ஸ்ட்
1940-1956 கலாநிதி எஸ். பரணவிதான
1956-1967 கலாநிதி சி.ஈ. கொடகும்புற
1967-1979 கலாநிதி ஆர.எச். த சில்வா
1979-1983 கலாநிதி சத்தா மங்கள கருணாரத்ன
1983-1990 கலாநிதி ரோலன்ட் சில்வா
1990-1992 திரு.எம்.எச். சிறிசோம
1992-2001 கலாநிதி எஸ்.யு. தெரனியகல
2001-2004 
கலாநிதி டப்.எச். விஜயபால
2004 -ஜூன் 2017 கலாநிதி செனரத் திசாநாயக்க
2017 ஜூன் – ஜனவரி 2020

பேராசிரியர் பி.பி. திரு. மண்டவாலா (நடிப்பு)

2020 ஜனவரி -டிசம்பர்

பேராசிரியர் சேனரத் திசனநாயக்க
2021 ஜனவரி - முதல் தற்போது வரை
பேராசிரியர் அனுரா மனதுங்க

தொல்பொருளியல் திணைக்களம் இற்றைக்குப் பல வருடங்களுக்கு முற்பட்ட காலத்திலேயே பாரிய பொறுப்புகளுக்கு முகம் கொடுத்திருந்தது. அத்துடன் தொல்பொருளியல், முன்னேற்றமடைந்த தொழில்நுட்ப முறைகளை அடிப்படையாகக்கொண்டு மிகச்சிறந்த முறையில் அபிவிருத்தியடைந்த விஞ்ஞான ரீதியான பாடமாக மாறியுள்ளது. இலங்கை இந்து சமுத்திரத்தில் ஒரு சிறிய புள்ளி அளவிலான தீவாக இருப்பினும் அது இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட தொல்பொருளியல் நிலப் பாகங்களைக் கொண்டதாகவும் அபரிமிதமான தொல்பொருள்களுக்கு உரித்துக் கோருகின்ற மகத்துவம் மிக்க ஒரு தேசமாகவும் இருக்கிறது. 1940ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரமும் 1998ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க திருத்தத்தின் பிரகாரமும் இம்மரபுரிமையைப் பாதுகாத்துக்கொள்வது தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகத்தின் தனிப்பொறுப்பாகும். எந்தவொரு அமைப்பினதும் வேறு அதிகாரிக்கு அவருடைய அப்பொறுப்புகளை மறுக்க முடியாது.

2020 ஜனவரி முதல் தற்போது வரை

வெள்ளிக்கிழமை, 01 ஜனவரி 2021 07:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது