முகப்பு கருத்திட்ட செயற்பாடும் மதிப்பீடும்

கருத்திட்ட நெறிப்படுத்தல் மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு

அறிமுகம்

தொல்பொருளியல் திணைக்களத்தின் வருடாந்த செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்தல், மேற்பார்வை மற்றும் இணைப்பாக்கம் செய்தல், திணைக்களத்தின் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி அமைச்சு / திணைக்களம் / ஏனைய வெளிநிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்பூட்டுதல்.

கடமைப்பொறுப்பு

  • கருத்திட்ட முன்மொழிவுகளைப் பெற்று வருடாந்த மேம்பாட்டுத் திட்டத்தை தயாரித்தல்.
  • கருத்திட்ட முன்மொழிவுகளை அங்கீகரித்தல் / செலவுகள் பற்றிய குறிப்புக்களைப் பதிதல் மற்றும் கருத்திட்டங்களை அமுலாக்குகின்ற பிரிவுத் தலைவர்கள் / மாகாணத் தலைவர்களுக்கு வழங்குதல்.
  • கருத்திட்டத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் இடைக்கால முன்னேற்ற அறிக்கைக்களைப் பெற்றுக் கொள்ளலும்
  • கருத்திட்டங்கள் நிறைவடைந்த பின்னர் கருத்திட்ட பூர்வாங்க அறிக்கைகளை (Preliminary Reports) சம்பந்தப்பட்ட மாகாணத் தலையதிகாரிகளிடமிருந்தும் பிரிவுத் தலைவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளல்.
  • இறுதிக் கருத்திட்ட அறிக்கைகளை (Aili reports) மாகாணத் தலைமையதிகாரி களிடமிருந்தும் பிரிவுத்தலைவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளல்.
  • திணைக்களக் கருத்திட்டங்கள் பற்றிக் கேட்கப்படுகின்ற தகவல்களை அமைச்சுக்கள், வெளிநிறுவனங்கள் மற்றும் ஆட்களுக்கு வழங்குதல்
  • தொல்பொருளியல் ஆலோசனைப் பேரவைக் கூட்டங்கள் / பதவிநிலை உத்தி யோகத்தர்களின் கூட்டங்கள் / தலைமையத்தின் பதவிநிலை உத்தி யோகத்தர்களின் கூட்டங்கள் மற்றும் அனைத்துவிதமான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களையும் ஒழுங்குசெய்தலும் இணைப்பாக்கமும்.
  • உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த அனைவரினதும் முன்னேற்ற அறிக்கைகளை மாகாண மற்றும் பிரிவுத் தலைவர்களிடமிருந்து சேகரித்த பின்னர் முன்னேற்ற அறிக்கைகளை உரியவகையில் பெற்றுக்கொடுத்தவர்களின் விபரங்களை திட்டமிடல் பிரிவுக்குப் பெற்றுக்கொள்ளல் (சம்பந்தப்பட்ட மாதிரிப்படிவத்திற்கு அமைவாக)

ஈடேற்றிய சேவை

திணைக்களத்தின் ஒவ்வொரு பிரிவுகளிலும் ஈடேற்றப்படுகின்ற சேவைகளில் மற்றும் அவற்றிலான முன்னேற்றம் சம்பந்தமான இற்றைப்படுத்திய தகவல்களை மாதந் தோறும் / காலாண்டுவாரியாக / வருடாந்தம் திணைக்களத்திற்கும் அமைச்சருக்கும் அறிக்கை செய்தல்.

அமைச்சு / திணைக்களப் பிரிவுகள் / பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் வெளிவாரி நிறுவனங்களுடன் இணைப்பாகத்தில் ஈடுபடல்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011 08:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது