முகப்பு அரும்பொருட்காட்சிக் கூடம்

நூதனசாலைகள் பிரிவு

தொல்பொருளியல் நூதனசாலைகளின் தோற்றமும் விரிவாக்கமும்

தொல்பொருளியல் திணைக்களத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதற்கு மேலதிகமாக தொல்பொருள் ரீதியான இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்காக திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தொல்பொருள்களை காட்சிக்கு வைக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. திணைக்களத் தலைமையகம் 1930 இல் அநுராதபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வேலையில் திணைக்களத்திடம் இருந்த முக்கியமான பண்டைய நாணயங்கள் கொழும்பு நூதனசாலையிடம் ஒப்படைக்கப்பட்டன. திணைக்களத்திடம் காணப்பட்ட ஒருசில கல்சிற்பங்கள் நூதனசாலையின் புதிய கல்லுருப்படைப்புப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

அநுராதபுரத்தில் எஞ்சியிருந்த பொருட்கள் 1931 இல் கல்பொம்மை கூடமொன்றிலும் மட்பாண்டக் கூடமொன்றிலும் முழுமையாகவே தயாரிக்கப்பட்டன. எனினும் இவ்விரு அறையும் தனித்தனியாக அமைந்திருந்தமையால் அப்பொருட்களை பார்வையிடுவது சிரமமானதாக அமைந்ததெனக் கருதியமையால் 1934 இல் அப்பொருட்கள் ஒரே அறையில் கிரமமாக வைக்கப்பட்டன. இக்காலப்பகுதியாகும் போது அநுராதபுர நூதனசாலை நிலவவேண்டுமென்பது திணைக்களத்தினால் கடுமையாக உணரப்பட்டது. திணைக்களத்தின் பொருட்தொகுப்புக்கு தொடர்ச்சியாக புதிதாக பொருட்கள் கிடைத்ததோடு 1950 ஆம் ஆண்டாகும் வேளையிலும் தொல்பொருளியியல் திணைக்கள நூதனசாலையொன்றை அமைக்கும் முயற்சி நிலவவில்லை.

குருநாகல் அரசாங்க அதிபருடன் மேற்கொண்ட கடிதப் பரிமாற்றம் மூலமாக குருநாகல் அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ குடிமனையை தொல்பொருளியல் நூதனசாலைக் காக பெற்றுக்கொள்வதில் விருப்பமின்மை கிடையாதென திரு. செனரத் பரனவிதான கூறியுள்ளார். திணைக்களத்தின் முதலாவது கண்காட்சியாக அமைந்தது 1949 யூன் 8 முதல் 12 வரை பெத்தேகான அகழ்வு வேலைத்தளத்தில் நடத்தப்பட்ட கண்காட்சி யாகும்.

தொல்பொருளியில் நூதனசாலைகளின் தோற்றம் 1940 ஆம் தசாப்தங்களில் இடம்பெற்ற போதிலும், அதன் வளர்ச்சிக் காலகட்டம் 1950 இல் இருந்தே இடம்பெற்றுள்ளது. இதன் ஆரம்பகாலப் பெயர் புராவித்யாபவன என்பதாக அமைந்தது. இலங்கையில் தொல்பொரு ளியல் திணைக்களத்தின் பணிகள் தொடங்கியபின்னர் 1940 வரை கழிந்த காலப் பகுதிக்குள்ளே தொல்பொருளியில் திணைக்களத்திற்கு கிடைத்த தொல்பொருள் சின்னங் களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்த மட்டத்திலேயே நிலவியது. அநுராதபுர தொல்பொருளியில் நூதனசாலை ஆரம்பிக்கப்படும் வரை கண்காட்சிக்காக மிகப் பொருத்தமான தொல்பொருள் சின்னங்கள் தேசிய நூதனசாலைக்கு வழங்கப்பட்டதோடு, ஏனைய தொல்பொருள் சின்னங்கள் தொல்பொருள் இரசாயன ஆய்வுகூடம், தொல்பொருள் களஞ்சியம் என்பவற்றில் மாத்திரமன்றி அகழ்வுக்கு அண்மித்த இடங்களில் முறைசாரா வண்ணம் குவிக்கப்பட்டிருந்தன. இக்காரணத்தினால் இதற்கான ஒழுங்கமைந்த தீர்வாக 1947 இல் அநுராதபுர புராவிது பவன செனரத் பரணவிதான அவர்களின் முனைப்பான பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
கி. பி. 1952 வரை தொல்பொருளியில் நூதனசாலை புராவிது பவன என அழைக்கப் பட்டது. அதன்பின்னர் இது புராவிது கட்டுகெய என மாறியது.

அந்தந்த வஸ்துக்களுக்கு பழைய கலாசாரத்தில் கிடைக்க வேண்டிய உரிய இடம்பற்றி வெளிக்கொணர ஏதுவாக அமைகின்ற சுற்றுச்சூழலில் இருந்து அப்பொருட்களை அகற்றி ஒரே மையத்தில் காட்சிக்கு வைக்க வேண்டுமென்ற கருத்துக்கு முரண்பட்டதாக தொல்பொருளியல் அதிகாரியால் ஆரம்பிக்கப்பட்ட ஒவ்வொரு பிரதேசத்திலும் இருந்து கிடைத்த பண்டைய பொருட்கள் அவை வைக்கப்பட்டிருந்த பிரதேசத்திலேயே துணை நூதனசாலைகளில் காட்சிக்கு வைக்கும் கொள்கை மிகவும் நியாயமானமென்பதற்கு தெதிகம தொல்பொருள் நூதனசாலை தக்க உதாரணமாகும்.

தொல்பொருள் நூதனச்சாலைகள் அமைக்கப்படுதல் தொடக்கப்பட்ட பின்னர் பிரதேச தொல்பொருள் நூதனசாலைகளை ஆரம்பித்தல் படிப்படியாக விரிவடைந்ததோடு, 1962 ஆம் ஆண்டில் நாரன்விற்ற சுமனசார கல் சிற்பவேலை தொல்பொருள் நூதனசாலை எனும் பெயரில் றுவன்வெலிசே நூதனசாலையும் 1962 இல் பொலநறுவை பொதுச் சேவைகள் விளையாட்டுக் கழக மண்டபத்தில் தொல்பொருளியில் நூதனசாலையும் அமைக்கப்பட்டதுடன் தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் பேணி வரப்பட்ட யாழ்ப்பாண நூதனசாலையும் அதன் ஊழியர்களும் தொல்பொருளியல் அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டமையும் அங்கு நூதனசாலை பேணிவரப்படுதலும் தொல்பொருளியல் அதிகாரசபை மூலமாகவே இடம்பெற்றது.

அதன் பின்னர் கி. பி. 1965 இல் கண்டி நூதனசாலையும், கி. பி. 1966 இல் சீகிரியா நூதனசாலையும் அமைக்கப்பட்டதோடு யாப்பஹூவ நூதனசாலையின் பணிகளும் இதற்குச் சமாந்திரமாக கி. பி. 1966 இல் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. கி. பி. 1970 இல் கிழக்கு மாகாணத்திற்காக தொல்பொருளியியல் நூதனசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. கி. பி. 1979 ஆம் ஆண்டாகும் போது அம்பாறை, இசுறுமுனிய, மஹியங்கனை, கதிர்காமம், அம்பலாந்தோட்டை ஆகிய இடங்களிலும் தொல்பொருளியல் நூதனசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக தற்போது தொல்பொருளியில் திணைக்களத்தின் கீழ் நிறுவகிக்கப்படுகின்ற நூதனசாலைகளின் வளர்ச்சி துரிதமாகத் தொடங்கியது.

தேடல் மற்றும் அகழ்வு மூலமாக வெளிக்கொணரப்பட்ட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பண்டங்களைப் பேணுதல், பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய கோட்பாடுகளை அமுலாக்கி பொதுமக்களுக்கு அறிவையும் பொழுது போக்கினையும் வழங்குவற்கான அனைத்து வசதிகளையும் வழங்குதல் மற்றும் இறந்தகால வஸ்துக்கள், சம்பவங்கள் மற்றும் செயற்பாடுகளைப் பாதுகாத்து அதனூடாக அறிவு, புரிந்துணர்வு, கல்வி மற்றும் களிப்பு ஆகியவற்றை உண்மையாகவும் கவர்ச்சியாகவும் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுத்தல் இதன் பிரதான நோக்கமாகும்.

A B C தகவல் நிலையங்கள்
யாழ்ப்பாணம் வவுனியா பதவிய வெஹெரகல
அநுராதபுரம் மிஹிந்தலை சேருவில தன்திரிமலே
கண்டி தீகவாபிய இசுறுமுனிய நாலந்த
பண்டுவஸ்நுவர யாப்பஹுவ லாஹூகல ஹத்திகுச்சி
புதுருவகல தெதிகம மாளிகாவில
கோட்டே தம்பதெனிய
யட்டால பிதுரங்கல
மாத்தறை நட்சத்திரக் கோட்டை முல்கிரிகல
கசாகல
வெல்கம்வெஹெர

பிரிவின் அடிப்படைக் கட்டமைப்பு

தொல்பொருளியில் திணைக்களத்திற்குச் சொந்தமான நூதனசாலைகள்

வடமத்திய மாகாணம்

வடமேல் மாகாணம்

மத்திய மாகாணம்

கிழக்கு மாகாணம்

மேல் மாகாணம்

தென் மாகாணம்

வட மாகாணம்

ஊவா மாகாணம்

சப்ரகமுவ மாகாணம்

 

அநுராதபுர நூதனசாலை (தேசிய)

1947 இல் அனுராதபுர புராவிது பவன திரு. செனரத் பரணவிதாரனவின் முனைப்பான அடியெடுப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. இது பழைய கச்சேரி கட்டடத்தில் அமைந்துள்ளது. இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலிரந்து கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள்கள் இந்த நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு யுகங்களைச் சேர்ந்த புத்தர்சிலை, கற்சாசனங்களின் தொகுப்பு, நாணயங்களின் தொகுப்பு அத்துடன் அதற்கு மேலாக பலவீனமான தொல்பொருள் சின்னங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தொல்பொருள் திணைக்களத்திற்குரிய தேசிய நூதனசாலையாக பெயர் குறிக்கப்பட உள்ளது. இந்த நூதனசாலையின் உள்ளேயும் வெளியேயும் திறந்தவெளிப் பிரதேசங்கள் காட்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொலைபேசி : +94 25 3856564

மேலே

மிஹிந்தலை நூதனசாலை (இடத்துக்குரிய)

மிஹிந்தலை புனித பகுதியிலிருந்து கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் வைக்கப்பட்டு இடத்துக்குரிய நூதனசாலையாக கண்காட்சி மட்டத்தில் பேணிவரப்படுகின்றது. தற்போது புனரமைப்பு மட்டத்தில் நிலவுகின்றது.

தொலைபேசி : +94 25 2266005

மேலே

வெஹெரகல நூதனசாலை (இடத்துக்குரிய)

வெஹெரகல புனித பகுதியிலிருந்து கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் வைக்கப்பட்டு இடத்துக்குரிய நூதனசாலையாக பேணப்பட்டு வருகின்றது. நூதனசாலையின் உட்பறத்திலும் வெளிப்புறத்திலும் இந்த தொல்பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலே

இசுறுமுனிய நூதனசாலை (இடத்துக்குரிய)

இசுறுமுனிய புனிதபகுதியிலிருந்து கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் வைக்கப்பட்டு ஒரு இடத்துக்குரிய நூதனசாலையாக பேணிவரப்படுகின்றது.

மேலே

தந்திரிமலை நூதனசாலை (இடத்துக்குரிய)

தந்திரிமலை புனிதப்பகுதிலியிருந்து கிடைத்த அந்த இடத்தின் தொல்பொருளியில் மற்றும் வரலாற்று ரீதியான மரபுரிமையை எடுத்துக்காட்டத்தக்க வகையில் இந்த நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலே

பண்டுவஸ்நுவர நூதனசாலை (பிரதேச)

குருநாகல் மாவட்டத்தின் பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் அமைந்துள்ள இது குருநாகல் - சிலாபம் வீதியல் கொட்டம்பிட்டிய சந்தியில் இடஅமைவு பெற்றுள்ளது. நூதனசாலை சம்பந்தமாக தொல்பொருளியல் திணைக்களத்தின் இடையீடு முதல் தடவையாக ஏறக்குறைய 1970 ஆம் தசாப்தத்தில் காணப்பட்டது. அதன்பின்னர் 1977 இல் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ குடிமனையில் நூதனசாலை அமைக்கப்பட்டதோடு 1983 இல் தற்போது பேணிவரப்படுகின்ற நூதனசாலை திணைக்களத்தினால் கையேற்றப் பட்ட பழைய கட்டடத்தில் பேணப்பட்டு வருகின்றது. இது வடமேல் மாகாணத்தின் பிரதேச நூதனசாலையாக அமைவதோடு அகழ்வு மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்கள், நன்கொடைகள், நீதிமன்றத் தீர்ப்பின்படியும் குருநாகல் மாகாணசபை நூதனசாலையூடாக பெற்றுக்கொடுத்த தொல்பொருளியில் சின்னங்களும் ஒருசில அரிய புராதனசின்னங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி : +94 37 2291065

மேலே

புத்தளம் நூதனசாலை (இடத்துக்குரிய)

கலாசார, தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் பிரதியமைச்சர் கௌரவ த. மு. தசநாயக்க அவர்களின் தலைமையில் 2006.08.17 ஆம் திகதி இது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. பிரதேசத்தில் இருந்து கிடைத்த சில தொல்பொருள் சின்னங்கள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி : +94 32 2265861

மேலே

ராஜாங்கனய நூதனசாலை (இடத்துக்குரிய)

மயிலேவ தம்புத்த பிரதேசத்தைச் சேர்ந்த ராஜாங்கனய அதாவது ஹத்திகுச்சி விஹாரையின் அருகில் உள்ள இந்த இடத்துக்குரிய நூதனசாலை முதலில் நிலவிய இடத்தில் இருந்து அகற்றப்பட்டு புதிய கட்டடமொன்றில் திட்டமிடப்பட்டு வருகின்றது. எனினும் இற்றைவரை நூதனசாலை மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட வில்லை. ஹத்திகுச்சி விஹாரையின் வரலாற்றுச் சிறப்பிற்கு மெருகூட்டுவதற்காக அந்த இடத்திலிருந்து கிடைத்த தொல்பொருள் சின்னங்களை காட்சிக்கு வைத்து நிலைய நூதனசாலையொன்றாக மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி : +94 37 3877726

மேலே

யாப்பஹுவ நூதனசாலை (இடத்துக்குரிய)

யாப்பஹுவ விஹாரைக்கு அருகிலேயே அமைந்துள்ள நூதனசாலைக் கட்டிடம் தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டு புதிய கட்டடம் அமைக்கப்பட்டு கண்காட்சி திட்டமிடப் பட்டுள்ளது. இங்கு யாப்பஹுவ விஹாரைக்கு பிரதேசத்தில் காணக்கூடியதாக உள்ள தொல்பொருளியில் சார் மரபுரிமைகள் பற்றிய விபரப் பலகைகளும் யாப்பஹுவ புனித தலத்திலிருந்து கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் சிலவும் காட்சிக்காக வைக்கப் பட்டுள்ளன. இந்த புதிய யாப்பஹுவ நூதனசாலை 2010 ஆம் ஆண்டில் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

தொலைபேசி : +94 37 3981395

மேலே

தம்பதெனிய நூதனசாலை (இடத்துக்குரிய)

தம்பதெனிய இடத்துக்குரிய தொல்பொருளியல் நூதனசாலையின் அந்த விஹாரையின் தேரரால் சேகரிக்கப்பட்டிருந்த பண்டங்களும் தம்பதெனிய பர்வதத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட களிமண் சட்டிகள் சிலவும் இந்த நிழற்பட பலகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது 2008 ஏப்றில் மாதத்தில பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப் பட்டது.

தொலைபேசி : +94 37 3877729

மேலே

கண்டி நூதனசாலை (பிராந்திய)

மத்திய மாகாணத்திலிருந்து கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் இந்த நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பிராந்திய நூதனசாலை எனும் வகையில் காட்சி மட்டத்தில் நிலவுகின்றது.

மேலே

நாலந்த நூதனசாலை (இடத்துக்குரிய)

2008 மார்ச் மாதத்தில் இந்த நூதனசாலை நிழற்பட நூதனசாலையெனும் வகையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளாந்த தொல்பொருள் நிலையத்தினதும் சுற்றுப்புறத்தில் உள்ள தொல்பொருளியல் சார்ந்த இடங்களினதும் நிழற்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி : +94 81 3827734

மேலே

பிதுரங்கல நூதனசாலை (இடத்துக்குரிய)

பிதுரங்கல தொல்பொருளியல் நிலப்பரப்பில் இருந்து கிடைத்த தொல்பொருள் சின்னங்களும் நிழற்படங்களும் மக்களின் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இடத்துக்குரிய நூதனசாலை எனும் வகையில் பிதுரங்கலவில் இருந்து கிடைத்த தொல்பொருள் சின்னங்களும் நிழற்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது 2008 மார்ச் 13 ஆம் திகதியன்று பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

மேலே

தீகவாபிய நூதனசாலை (பிராந்திய)

கிழக்கு மாகாணத்தில் இருந்து கிடைத்த பெரும்பாலான தொல்பொருள் சின்னங்கள் இந்த நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தீகவாபிய தொல்பொருள் நிலயைத்தில் பல தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது அம்பாறை பிராந்திய தொல்பொருள் நூதனசாலையாக பேணி வரப்படுகின்றது.

மேலே

சேருவில நூதனசாலை (இடத்துக்குரிய)

சேருவில விஹாரையின் விஹாராதிபதி தேரரால் சேகரிக்கப்பட்டிருந்த தொல்பொருட்களை வைப்புச் செய்து இந்த நூதனசாலை உருவாக்கப்பட்து. விபரப் பலகைகளில் உள்ளடங் கக்கூடியவாறு சேருவில தொல்பொருள் நிலப்பரப்பிலிருந்து தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் மாத்திரம் தற்போது வைக்கப்பட்டுள்ள இந்த நூதனசாலை காட்சி மட்டத்திற்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலே

வெல்கம் வெஹெர நூதனசாலை (இடத்துக்குரிய)

வெல்கம்வெஹெர இடத்துக்குரிய நூதனசாலையாக தயாரிக்கப்பட்டு வருகின்றது.

மேலே

கோட்டே நூதனசாலை (பிராந்திய)

1992 இல் ஈ. டபிள்யூ. பெரேரா வசித்த வீட்டை நூதனசாலையாக பாவித்து ஈ. டபிள்யூ. பெரேரா ஞாபகார்த்த நூதனசாலையாக திறந்து வைக்கப்பட்ட இந்த நூதனசாலை தற்போது 5 கண்காட்சிக் கூடங்களை கொண்டதாக விளங்குகின்றது. பண்டைய நினைவுத்தூபிகள், நிழற்படங்ள், பல்வேறு கொடிகள், வாள், குத்துவாள், துப்பாக்கிகள், சிலைகள், நாணயங்கள், பீங்கான் பொருட்கள், மட்பாண்டங்கள் மற்றும் ஈ டபிள்யூ பெரேரா அவர்கள் பாவித்த பண்டங்களின் சேகரிப்பு இந்த நூதனசாலையில் காட்சி மட்டத்தில் காணப்படுகின்றது. திரு. டக்ளஸ் ரணசிங்கவின் அன்பளிப்பு மற்றும் பணம் கொடுத்து வாங்கிய பண்டங்களைப் போன்றே அகழ்வுகளின் போது சுற்றுப்புறங்களில் கட்டங்கள் அமைக்கப்பட்ட வேளையிலும் கிடைத்த பண்டங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டே பிரதேசத்தின் தொல்பொருள்சார் மரபுரிமையை வெளிப் படுத்தும் வகையில் இந்த நூதனசாலை அமைக்கப்பட்டள்ளது. புதிய காட்சி மட்டத்தில் நிலவுகின்றது. இது 1995 இல் நூதனசாலையொன்றாக மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

தொலைபேசி : +94 11-2667377 / +94 11 - 3117392
கோட்டே தொல்பொருளியல் நூதனசாலை,
பங்களா சந்தி,
அத்துள்கோட்டே.

பொரெல்ல - பிற்றகோட்டே சந்தியிலிருந்து 10 கி. மீ சென்றவிடத்து அத்துள்கோட்டே பங்களாசந்தியில் நூதனசாலை நிறுவப்பட்டுள்ளது.

மேலே

மாத்தறை நட்சத்திரக் கோட்டை நூதனசாலை (பிராந்திய)

மாத்தறை பிராந்திய நூதனசாலை எனும் வகையில் தொல்பொருளியில் மரபுரிமையும் வரலாற்றுப் பெறுமதியும் கொண்ட தொல்பொருள் சின்னங்களை காட்சிப்படுத்துதல் இங்கு இடம்பெறுகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட யுகத்துடன் தொடர்புடைய எலும்புக்கூட்டுத் தொகுதி இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட யுகத்தில் இருந்து அநுராதபுரம், பொலநறுவை, கண்டி எனும் வகையில் யுகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வகையில் குடியேற்றக் காலப்பகுதிவரை விரிவடைந்து வருகின்ற தொல்பொருள் சின்னங்களையும விபரப் பலகைகளையும் இங்கு காண முடியும். வரலாற்றுக்கு முற்பட்ட கட்டடக்கலை, கலைகள், கற்சாசனங்கள், நாணயங்கள் மற்றும் குடியேற்ற ஆட்சிக் காலப்பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்ற தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி : +94 11 3167978

மேலே

யட்டால நூதனசாலை (இடத்துக்குரிய)

யட்டால தாது கோபுர அகழ்வின் போது கிடைத்த தொல்பொருட்கள் காட்சிப்படுத்தும் இடத்திற்குறிய நூதனசாலையாக உள்ளது. விதவிதமான புத்தர் சிலைகள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் போன்ற யட்டாள புனித பூமியை சார்ந்த தொல்பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி : + 94 91 3907787

மேலே

கசாகல நூதனசாலை (இடத்துக்குரிய)

கசாகல விஹாரையின் வரலாற்றுச் சிறப்பினை வெளிக்காட்டுவதற்காக இடத்துக்குரிய நூதனசாலை எனும் வகையில் அந்த இடத்திலிருந்து கிடைத்த தொல்பொருட்களும் கசாகல இடப்பரப்புக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய விபரப் பலகைகளைக் காட்சிப் படுத்த உத்தேச திட்டமட்டத்தில் நிலவுகின்ற நூதனசாலையாகும்.

மேலே

முல்கிரிகலை நூதனசாலை (இடத்துக்குரிய)

முல்கிரிகலை விகாரையின் வரலாற்று நிலையை காண்பிப்பதற்காக இடத்துக்குரிய நூதனசாலையாக உள்ளது. அந்த இடத்தில் கிடைத்த தொல்பொருட்கள் இடத்தை சார்ந்த விபரங்கள் அடங்கிய பலகைகள் நூதனசாலையில் உள்ளது.

மேலே

யாழ்ப்பாண நூதனசாலை (பிராந்திய)

ஆறுமுக நாவலருக்கு சொந்தமாக இருந்த காணி 1975 இல் ஆறுமுக நாவலர் மன்றத்தினால் தொல்பொருளியல் திணைக்களத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டதோடு, அதன் பின்னர் 1978 இல் அப்போதைய தொல்பொருளியல் ஆணையாளராக விளங்கிய கலாநிதி (திரு) றோலண்ட் சில்வாவின் மேற்பார்வையின் கீழ் நூதனசாலைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு நூதனசாலை நிறுவப்பட்டது. 1978 இல் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டத்தில் அதிக இடப்பரப்பு கண்காட்சிக் கூடங்களுக்காக பாவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தை உள்ளடக்கக்கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த யாழ்ப்பாண பிராந்திய நூதனசாலை தொல்பொருளியல் மரபுரிமைகளையும் வரலாற்றுப் பெறுமதிமிக்க தொல்பொருள் சின்னங்களையும் காட்சிப்படுத்துகின்றது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வட மாகாணத்தின் பல பகுதிகளினிருந்தும் ஆட்களிடமிருந்தும் பெறப்பட்ட உன்னதமான பண்டங்களின் சேகரிப்பினை இங்கு காண முடியும். பௌத்த மற்றும் இந்து சமய மரபுரிமைகள், சாதாரண மக்கள் வாழ்க்கைத் தகவல்கள், பற்றிய காரணிகளாக அமைகின்ற இப்பண்டங்களின் சேகரிப்பு உலோகம், மரம், கல் ஆகிய பிரதான பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக நாணயங்கள் (பல்வேறு யுகங்களைச் சித்தரிக்கின்ற மற்றும் மாதிரிகள்) பலவும் இதில் அடங்குகின்றன.

மேலே

வவுனியா நூதனசாலை (பிராந்தியம்)

வவுனியா பிரதேசத்தை உள்ளடக்கக்கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள இப் பிராந்திய நூதனசாலையில் தொல்பொருளியில் மரபுரிமை மற்றும் வரலாற்றுப் பெறுமதிமிக்க தொல்பொருள் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

மேலே

புதுருவகல நூதனசாலை (பிராந்தியம்)

புதுருவகல பிராந்திய நூதனசாலை எனும் வகையில் தொல்பொருளியல் மரபுரிமைகளும் வரலாற்றுப் பெறுமதிமிக்க தொல்பொருள் சின்னங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

தொலைபேசி : +94 55 33553617

இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்றுக்கு முற்பட்ட யுகத்தில் இருந்து அநுராதபுரம், பொலநறுவை, கண்டி எனும் வகையிலான யுகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யத்தக்கதாக நிலவி வருகின்ற தொல்பொருள் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

மேலே

மாளிகாவில நூதனசாலை (இடத்துக்குரிய)

மாளிகாவில விஹாரையில் வரலாற்றுச் சிறப்பினை வெளிக்காட்டும் பொருட்டு இடத்துக்குரிய நூதனசாலை என்ற வகையில் அந்த இடத்திலிருந்து கிடைத்த தொல்பொருள் சின்னங்களையும் அந்த இடத்துக்குரிய தகவல்களை உள்ளிட்ட விபரப் பலகையையும் காட்சிக்கு வைக்க உத்தேச திட்ட மட்டத்தில் நிலவுகின்ற நூதனசாலையாகும்.

தொலைபேசி : +94 55 33577810

மேலே

தெதிகம நூதனசாலை (பிராந்திய)

தொல்பொருளியல் திணைக்களத்தின் பிராந்திய நூதனசாலைகள் ஆரம்பிக்கப்படுதலானது தொல்பொருளியில் நூதனசாலைகளின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றது. அதன் முதலாவது பிராந்திய தொல்பொருளியல் நூதனசாலையாக அமைவது கி. பி. 1954 இல் ஆரம்பிக்கப்பட்ட தெதிகம நூதனசாலையாகும். தெதிகம கொட்டவெஹெர சுதீகர, தாதுகோபுரத்தை அகழ்ந்த வேளையில் கிடைத்த தொல்பொருள் சின்னங்களை காட்சிக்காக வைக்கும் அடிப்படைக் குறிக்கோள்களை கொண்டதாக இந்த நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டது. எனினும் பண்டுவஸ்நுவர மற்றும் கேகாலை மாவட்டத்திலிருந்து கிடைத்த பராக்கிரமபாகு மன்னர் காலத்துக்குரிய பல்வேறு புராதன சின்னங்களும் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றது.

தொலைபேசி : +94 45 2223035 / +94 36 3367718
தெதிகம தொல்பொருளியில் நூதனசாலை,
துன்தொட்ட,
தெதிகம

கொழும்பு கண்டி வீதியில் நெலும்தெனிய சந்தியில் இருந்து சுமார் 7 கி. மீ. தூரம் சென்றதும் இந்த நூதனசாலையை நெருங்க முடியும்.

மேலே

வழங்கும் சேவைகள்

 • வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் நூதனசாலை மு. ப. 8.00 மணியில் இருந்து பி. ப. 5.00 மணிவரை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
 • அனுமதிச்சீட்டு இன்றி நூதனசாலையைப் பார்வையிட முடியும்.
 • பார்வையிட வருபவர்களுக்கு அவசியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு உத்தியோகத்தர்கள் வழிகாட்டல்களை வழங்குவர்.
 • நூதனசாலை பற்றிய ஆய்வினை மேற்கொள்பவருக்கு தகவல்களைப் பெற வேண்டுமாயின நூதனசாலை பணிப்பாளரினதோ பிரதேச உதவி பணிப்பாளரி னதோ அனுமதி பெறப்படல் வேண்டும்.
 • பிராந்தியத்திற்குரிய நூதனசாலைகளின் வெளியீடுகளை சந்தைப்படுத்தும் விற்பனை நிலையமொன்று பேணி வரப்படுவதோடு திணைக்கள வெளியீடுகளை அதனூடாகப் பெற்றுக் கொள்ளலாம்.
 • அத்தியாவசிய விடயத்துக்காகவன்றி நூதனசாலைப் பொருட்களின் நிழற்படம் எடுப்பதற்கான அனுமதி கிடையாதென்பதோடு ஏதேனும் காரணத்தின் பேரில் நூதனசாலைப் பொருட்களின் நிழற்படம் எடுக்கப்படுமாயின் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்திலான அனுமதி கிடைத்திருக்க வேண்டும்.
 • வெளிநிறுவனங்களினால் நிறுவ எதிர்பார்த்துள்ள நூதனசாலைகளுக்கு அவசிய மான அறிவினை வழங்குதல்.

2010 இல் ஈடேற்றிய பணிகள்

 • கசாகல கண்காட்சியை ஏற்பாடு செய்தல்.
 • முல்கிரிகல கண்காட்சியை ஏற்பாடு செய்தல்.
 • மாளிகாவில கண்காட்சியை ஏற்பாடு செய்தல்.
 • தாரகாகொட்டுவ மறுசீரமைப்புப் பணிகள்.
 • தெதிகம பெயர்பலகைகளைத் தயாரித்தல்.
 • கோட்டே பெயர்ப்பலகைகளைத் தயாரித்தல்.
 • தெலிவல ரஜமஹா விஹாரையின் புராதன சின்னங்களை பதிவேட்டில் குறித்தல்.
 • யாப்பஹுவ நூதனசாலையை திறந்து வைத்தல்.
 • ராஜாங்கன நூதனசாலை கண்காட்சியை ஏற்பாடு செய்தல்.
 • சேருவில நூதனசாலை மறுசீரமைப்புப் பணிகள்.
 • வெல்கம்வெஹெர நூதனசாலையை நிர்மாணித்தல்.
 • மிஹிந்தலை நூதனசாலைக் கட்டடப் புனரமைப்பு.
ஞாயிற்றுக்கிழமை, 08 டிசம்பர் 2013 04:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது