கலைஞர்களுக்கான அரச விருது

Kalaijar Awardஇலங்கைத் திருநாட்டில் முதன்முறையாகத்   தமிழர் பாரம்பரிய  மற்றும் நவீன  கலைகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும்  கலைஞர்களுக்கான அரச விருது

இலங்கையிற் கலையிலக்கியத் துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் கலைஞர்களை உள்ளடக்கி, அறுபது வயதிற்கு மேற்பட்ட  கலைஞர்களுக்குக்  கலாபூஷண விருது முதலான அரச விருதுகள்  வருடந்தோறும் வழங்கப்பட்டும் வருகிறன. ஆனாலும் இலங்கைத் தீவில், தமிழர்தம் பாரம்பரிய மற்றும் நவீன  கலைகளைப் பேணிப் பாதுகாத்து, ஊக்குவித்து, அரச  கௌரவம் நல்கும்  செயற்பாடு முனைப்புடன் இதுவரை இடம்பெறவில்லை என்பது பெருங்குறைபாடும் மறுக்கமுடியாத உண்மையும் ஆகும். Read more...

Last Updated ( Thursday, 20 June 2019 05:34 )
 

20ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக் கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்

Research Conferenceஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இவ் வருடத்திற்கான ஆய்வு மாநாடு “இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக் கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்” எனுந் தொனிப்பொருளில் எதிர் வரும் ஒக்டோபர் மாதம், முன்னெடுக்கப்படவுள்ளது.

Read more...
Last Updated ( Wednesday, 19 June 2019 09:04 )
 

சுவரொட்டிச் சித்திரப்போட்டி – 2019

Artஎதிர்வரும் ஜூலை, 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கிடையே இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திடுவீர்” என்னும் கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் சுவரொட்டிச் சித்திரப்போட்டி

Read more...
Last Updated ( Wednesday, 19 June 2019 10:09 )
 

க.பொ.த. (உ/த) மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

 

essayஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த ஆய்வு மாநாட்டினை முன்னிட்டு, க.பொ.த. (உ/த) மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more...
Last Updated ( Wednesday, 19 June 2019 10:35 )
 

கலாபூஷண விருது - 2019

இலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற கலைஞர்கள் இலக்கியவாதிகள் விற்பன்னர்களுக்கு வருடந்தோறும் அரசின் உயர்விருதான கலாபூஷணம் எனும் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது வழங்கல் தொடர்பான செயற்பாடுகளை வருடந்தோறும் கலாசார அமைச்சின் கீழ் இயங்குகின்ற கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்கின்றது. இவ்வைபவத்தின் போது சிங்களம் முஸ்லீம் தமிழ் ஆகிய மூவினக் கலைஞர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள்.


தமிழ்க் கலைஞர்களைத் தெரிவு செய் யும் பொறுப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு உரியதாகும். அறுபது வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள் மட்டுமே இவ்விருதினைப் பெறுவதற்கான தகைமையுடையவர்களாவர். சிற்பம், ஓவியம், நடனம், வாய்ப்பாட்டு, தவில், நாதஸ்வரம், நாடகம், சினிமா, நாட்டுப்புறவியல், இலக்கியம், நாட்டுக்கூத்து, ஊடகத்துறை போன்ற பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்புறச் சேவையாற்றியவர்கள் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

2019ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருதுக்கு தகைமையுடைய தமிழ்க் கலைஞர்கள் தமது விண்ணப்பங்களை பிரதேச, மாவட்டச் செயலகங்களில் பணிபுரியும் எமது திணைக்கள கலாசார உத்தியோகத்தர்களிடம் இருந்தும், திணைக்களத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களோடு கலைஞர்கள் தமது தகுதியை உணர்த்தும் முழுமையான ஆவணங்களை பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகங்களில் எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு முன் சமர்ப்பித்தல் வேண்டும்.

பணிப்பாளா்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
இந்துமத அலுவல்கள் அமைச்சு


Kalabushana Application Form 2019

 

கலாபூஷண விருது - 2018

Normal 0 false false false EN-US X-NONE TA
Last Updated ( Wednesday, 19 June 2019 06:42 )
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 2