கலாபூஷண விருது - 2019

E-mail Print PDF

இலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற கலைஞர்கள் இலக்கியவாதிகள் விற்பன்னர்களுக்கு வருடந்தோறும் அரசின் உயர்விருதான கலாபூஷணம் எனும் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது வழங்கல் தொடர்பான செயற்பாடுகளை வருடந்தோறும் கலாசார அமைச்சின் கீழ் இயங்குகின்ற கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்கின்றது. இவ்வைபவத்தின் போது சிங்களம் முஸ்லீம் தமிழ் ஆகிய மூவினக் கலைஞர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள்.


தமிழ்க் கலைஞர்களைத் தெரிவு செய் யும் பொறுப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு உரியதாகும். அறுபது வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள் மட்டுமே இவ்விருதினைப் பெறுவதற்கான தகைமையுடையவர்களாவர். சிற்பம், ஓவியம், நடனம், வாய்ப்பாட்டு, தவில், நாதஸ்வரம், நாடகம், சினிமா, நாட்டுப்புறவியல், இலக்கியம், நாட்டுக்கூத்து, ஊடகத்துறை போன்ற பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்புறச் சேவையாற்றியவர்கள் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

2019ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருதுக்கு தகைமையுடைய தமிழ்க் கலைஞர்கள் தமது விண்ணப்பங்களை பிரதேச, மாவட்டச் செயலகங்களில் பணிபுரியும் எமது திணைக்கள கலாசார உத்தியோகத்தர்களிடம் இருந்தும், திணைக்களத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களோடு கலைஞர்கள் தமது தகுதியை உணர்த்தும் முழுமையான ஆவணங்களை பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகங்களில் எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு முன் சமர்ப்பித்தல் வேண்டும்.

பணிப்பாளா்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
இந்துமத அலுவல்கள் அமைச்சு


Kalabushana Application Form 2019

 

கலாபூஷண விருது - 2018

Normal 0 false false false EN-US X-NONE TA
Last Updated ( Wednesday, 19 June 2019 06:42 )
 
Page 2 of 2
November 2019
S M T W T F S
27 28 29 30 31 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30

News & Events

கலைஞர்களுக்கான அரச விருது

கலைஞர்களுக்கான அரச விருது

இலங்கைத் திருநாட்டில் முதன்முறையாகத்   தமிழர் பாரம்பரிய  மற்றும் நவீன  க... Read more
தேசிய ஆக்கத்திறன் விருதுகள் - 2019

தேசிய ஆக்கத்திறன் விருதுகள் - 2019

நாடளாவிய ரீதியில் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களது ஆன்மீகம் மற்றும் ... Read more
20ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக் கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்

20ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக் கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இவ் வருடத்திற்கான ஆய்வு மாநாட... Read more
சுவரொட்டிச் சித்திரப்போட்டி – 2019

சுவரொட்டிச் சித்திரப்போட்டி – 2019

எதிர்வரும் ஜூலை, 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி வ... Read more

கலாபூஷண விருது - 2019

இலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற கலைஞர்கள்... Read more