”அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் தர்மாசிரியர் பரீட்சையில் சித்திபெற வேண்டும்”

E-mail Print PDF

”இந்துசமய அறநெறிப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது சமய அறிவை விசாலப்படுத்திக்கொள்ளும் வகையில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் நடாத்தும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குரிய இறுதி நிலை மற்றும்  தர்மாசிரியர் பரீட்சைகளில் சித்தி பெறுவது மிகவும் அவசியமாகும். இறுதிநிலைப் பரீட்சை நான்கு பாடங்களையும், தர்மாசிரியர் பரீட்சை ஐந்து பாடங்களையும் கொண்ட வினாப்பத்திரங்களாக அமைந்துள்ளன. இவ்விரு பாடத்திட்டங்களையும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக அறிந்துகொள்ளும் போது நமது சமய தத்துவ அடிப்படை அம்சங்களில் ஓரளவு பரந்துபட்ட அறிவினை பெற்றுக்கொள்ள முடியும்” இவ்வாறு கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை காலை கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் இரத்தினபுரி, பதுளை, மாத்தளை, நுவரேலியா, கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தர்மாசிரியர் பரீட்சைகளில் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளுக்கென ஆரம்பித்துவைக்கப்பட்ட இரண்டு நாள் வதிவிடக்கருத்தரங்கில் தலைமையேற்று உரையாற்றிய பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் அவர்கள் குறிப்பிட்டார்.

தர்மாசிரியர் பரீட்சை ஐந்து பாடநெறிகளைக் கொண்ட பாடத்திட்டத்திற்கு அமைவாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் நடாத்தும் இப்பரீட்சைக்கென முன்னோடிக் கருத்தரங்குகளை இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மாவட்டங்கள் தோறும் நடாத்திவருகின்றது. இதன் ஓர் அம்சமாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் (இந்துஆலய மற்றும் இந்துஆராய்ச்சி) ம.சண்முகநாதன், உதவிப்பணிப்பாளர் (இந்து அறநெறி மற்றும் இந்து விவகாரம்) ஹேமலோஜினி குமரன் மற்றும் திணைக்களக் கணக்காளர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு இப்பரீட்சையின் அடிப்படை அம்சங்கள், பரீட்சை நடாத்தப்படுவதன் நோக்கம் என்பவை தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.

கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கான விரிவுரைகளை பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன், உதவிப்பணிப்பாளர் ஹேமலோஜினி குமரன், திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.பவானி முகுந்தன், மற்றும் அ.கருணாகரன் ஆகியோர் நிகழ்த்தினர். இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் அவர்கள் ”அறநெறிப்பாடசாலைகள் இன்று எமது சமூகத்திற்கு அத்தியாவசிய தேவையாகவுள்ளது. இந்த அமைப்பின் மூலமாகவே நாம் சிறுவர்கள் மத்தியில் நற்பண்புகளை போதிக்கமுடியும். இன்றைய சமூக அமைப்பில் நமது சமய தத்துவங்களை மற்றும் ஒழுக்க விழுமியங்களை அவர்கள் மனதில் ஆளமாகப் பதிக்கவேண்டிய அவசியம் உள்ளது. நற்பண்புகளோடு வாழும் சிறுவர்களே நாளை சிறந்த சமூகத் தலைவர்களாக மிளிருவார்கள்.

நமது இந்துசமயம், விசாலமான இலக்கிய, தத்துவக் கருத்துக்களைக் கொண்ட வரலாறுடையது. வேத, ஆகமங்கள், .இதிகாச, புராணங்கள், திருமுறைகள் என்பன ஆழ்ந்த உட்பொருளைக்கொண்டு தெய்வீக தத்துவத்தை எமக்கு விளக்குகின்றன. வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்ந்து  பிறருக்கு நன்மைசெய்து இறைவன் என்ற மாபெரும் சக்தி பற்றி உணர்ந்து கொள்வதே இவ்வாழ்வின் பயனென எமது சமயம் போதிக்கின்றது. இத்தகைய போதனைகளை எமது ஞானிகள், தவசிகள் உணர்ந்தும், வாழ்ந்தும் காட்டினார்கள். அவர்கள் பெற்ற அனுபவமும், எமக்குத் தந்த தத்துவங்களும் சனாதன தர்மமான இந்துசமயத்தின் ஊற்றுக் கண்களாக விளங்குகின்றன. இந்துவாக வாழ்கின்ற நாம் இவற்றை அவசியம் அறிந்திருத்தல் வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள் கற்றுத்தெளிந்து கொள்ளுதல் முக்கியமானதாகும். அப்போதுதான் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு நாம் வழிகாட்டல்களை வழங்கமுடியும்.

தர்மாசிரியர் பரீட்சை என்பது அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்குரிய மிக உயர்ந்த தரத்திலான பரீட்சையாகும். ஐந்து பாடங்களிலும் சித்திபெறும் விண்ணப்பதாரிகளுக்கு ”தர்மாசிரியர்” என்ற விருதுடன் கூடிய சான்றிதழை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வழங்குகின்றது. இறுதிநிலைப் பரீட்சை, தமிழ் பண்டிதர் பரீட்சை, சைவப்புலவர் பரீட்சை, உயர்தரப் பரீட்சையில் இந்துசமயம் அல்லது இந்துநாகரீகப் பாடத்தில் சித்திபெற்றோர்  இந்து தர்மாசிரியர் பரீட்சைக்குத் தோற்ற தகுதி பெற்றோராவர். வருடந்தோறும் இத்தகைய விண்ணப்பதாரிகளை நாம் ஊக்குவிக்கின்றோம். அறநெறிபாடசாலை மாணவர்களுக்குக் கற்பிக்கும் நீங்கள், தவறாது இப்பரீட்சைக்குத் தோற்றி தங்கள் தகைமையை வளர்த்துக்கொள்வதோடு, மாணவர்களின் அறிவினையும் வளர்த்துக்கொள்ள முடியும். ஆதலினால் இவ்விருதினங்கள் நடைபெறும் செயலமர்வின் கருத்துக்களை ஆளமாக செவிமடுத்து கற்றுக்கொள்ளுமாறு அன்போடு கோட்டுக்கொள்ளுகின்றோம். எதிர்காலங்களில் அரச நியமனங்கள் வழங்கப்படும் போது இந்துசமயம் கற்பிக்கின்ற ஆசிரியர்களாக தர்மாசிரியர்கள் நியமனம் பெறும் வாய்ப்பும் உள்ளது” என மேலும் குறிப்பிட்டார்.

இவ்விருதினக் கருத்தரங்கின் போது வேதங்களும், ஆகமங்களும், இந்து ஞானிகளும் சமயப்பெரியார்களும்,  சைவசமய வரலாறு, பன்னிரு திருமுறைகள், கோயில்களும் கலைகளும் என்ற தலைப்புக்களில் விரிவுரைகள் இடம்பெற்றதோடு, தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான வழிகாட்டல் நூலும் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கு மறுநாள் நண்பகல் 1 மணியுடன் நிறைவு பெற்றதாக திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated ( Thursday, 20 March 2014 09:23 )
 
You are welcome to the website of the Department of Hindu Religious and Cultural Affairs which was established on the 1st of January 1986. This site gives you the details of the projects and programmes which are carried out for the benefit of the Hindu public and the data and the documents required to be submitted in order to obtain the services from the Department. The details of the Publications and news relating to the current affairs are updated from time to time. Your valuable suggestions are always welcome with regard to our website.
Vision
Preserved and well established Hindu Religion and Culture in Sri Lanka.

Mission
To actively contribute to preserve, promote and propagate the Hindu Religion, Hindu culture and arts and Hindu Religious education.
 
April 2014
S M T W T F S
30 31 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 1 2 3

News & Events

”அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் தர்மாசிரியர் பரீட்சையில் சித்திபெற வேண்டும்”

”இந்துசமய அறநெறிப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது சமய அறிவை வ... Read more

சமஸ்கிருத மொழி அடிப்படைகளின் மூலம் சிறந்த இலக்கியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்

“சமஸ்கிருத மொழி அடிப்படைகளின் மூலம் சிறந்த இலக்கியங்களை நாம் அறிந்து கொள... Read more

மஹா சிவராத்திரி விழா – 2014

இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களமும் இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் சைவ ப... Read more

2014 ஆம் ஆண்டிற்கான இந்துசமய விரத தினங்கள் தொடர்பான தீர்மானக் கூட்டம்

2014 ஆம் ஆண்டிற்கான இந்துசமய விரத தினங்கள் இலங்கையில் பயன்படத்தப்படும் வாக... Read more
அறநெறி ஆசிரியர்களுக்கான வதிவிடக் கருத்தரங்கு

அறநெறி ஆசிரியர்களுக்கான வதிவிடக் கருத்தரங்கு

இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்குமாகாண அறநெறி பாடசாலை ... Read more